பாஜகவில் அழகிரி இணைகிறார்? பொன். ராதாவின் பதில்

 

பாஜகவில் அழகிரி இணைகிறார்? பொன். ராதாவின் பதில்

மு.க.அழகிரி பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்திருக்கிறார்.

சென்னை: மு.க.அழகிரி பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்திருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான அழகிரி கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார். கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தன்னை கட்சியில் சேர்த்துக்கொள்வார்கள் என்று நம்பியிருந்த சூழலில் அவரை கட்சியில் சேர்க்காமல் ஷாக் கொடுத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதனையடுத்து தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் பொருட்டு தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரீனாவில் இருக்கும் கலைஞரின் நினைவிடத்திற்கு பேரணியாக சென்றார். 

ஆனால் வெறும் ஆயிரக்கணக்கானவர்கள் மட்டுமே அந்த பேரணியில் கலந்து கொண்டதால் அவருக்கு பெருத்த ஏமாற்றம் கிடைத்தது. இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அழகிரி அதிமுகவில் இணைய போகிறார், மதுரையில் திமுகவிற்கு எதிராக வேலை செய்ய போகிறார் என்றெல்லாம் செய்திகள் உலாவின. அதன் நீட்சியாக அமைச்சர் செல்லூர் ராஜூவையும் அவர் நேரில் சந்தித்தார். மேலும் தற்போது அழகிரி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

alagiri

இந்நிலையில், அழகிரி பாஜகவில் இணைய இருப்பதாக வெளியான தகவல் குறித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அழகிரி பாஜகவில் சேர்வது குறித்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை என பதிலளித்தார். 

இருப்பினும் அழகிரியை வளைத்தால் மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் தங்களது செல்வாக்கு உயரும் என பாஜக மேலிடம் நினைப்பதாகவும், ஆனால் அழகிரிக்கு முன் போல் செல்வாக்கு இல்லை எனவே அவரை கட்சியில் இணைத்துக்கொள்வது ஒன்றும் அவ்வளவு பெரிய அளவில் லாபத்தை தராது என தமிழக பாஜக, மேலிடத்திற்கு கூறியிருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.