பாஜகவின் தோல்வி தொடரும்: முத்தரசன் அதிரடி

 

பாஜகவின் தோல்வி தொடரும்: முத்தரசன் அதிரடி

நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவின் தோல்வி தொடரும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

மதுரை: நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவின் தோல்வி தொடரும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றதால் அதன் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவுக்கு தேர்தல் முடிவுகள் இடியாக இறங்கியுள்ளது. குறிப்பாக தான் ஆட்சி செய்த 3 மாநிலங்களையும் பறிகொடுத்திருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு என கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வி தொடரு. 5 மாநில தேர்தல்களில் பொதுவுடமை கட்சிகளின் செல்வாக்கு குறைந்துள்ளது. கூட்டணியில் சேராதது, தனித்து செயல்படுவதுதான் அதற்கு காரணம். வரும் காலங்களில் அந்த குறை சரி செய்யப்படும். தமிழக்த்தில் திமுக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றார்.