பாஜகவின் அடுத்த தலைவர் ரஜினிகாந்த்? திருநாவுக்கரசர் அதிரடி!!

 

பாஜகவின் அடுத்த தலைவர் ரஜினிகாந்த்? திருநாவுக்கரசர் அதிரடி!!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அப்போது போர் வரும்போது பார்த்துக்கொள்வோம் என அறிவித்திருந்த அவர், இதுவரை எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுவதாக ஒருதரப்பினர் விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்திரராஜனுக்கு பதில் பாஜகவின் மாநிலத் தலைவராக, நடிகர் ரஜினிகாந்த் வரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

Thirunavukarasar

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  திருநாவுக்கரசர்,  “பாஜவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவரால் எப்படி தலைவராக முடியும் என கேள்வி எழுப்பினார். பாஜகவின் மாநில தலைவர் பதவி என்றில்லை, அக்கட்சியின் தேசியத் தலைவர் பதவியை கொடுத்தாலும் கூட அவர் ஏற்க மாட்டார்” என்று தெரிவித்தார்.