பாஜகவினர் செய்யும் பித்தலாட்ட வேலை! விளக்கம் தரும் வசந்த் அண்ட் கோ உரிமையாளர்!! 

 

பாஜகவினர் செய்யும் பித்தலாட்ட வேலை! விளக்கம் தரும் வசந்த் அண்ட் கோ உரிமையாளர்!! 

வங்கிகளில் மக்கள் விவசாய அடிப்படையில் வைத்திருக்கும் கடன்கள் முழுவதும் தள்ளுபடியாக இருப்பதால் அனைவரும் வசந்த் அன் கோ  நிறுவனத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கும் படி வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வைரலானது. இவை பாஜகவினர் செய்யும் பித்தலாட்டம் என வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் நிறுவனரும், கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளருமான எச்.வசந்தகுமார் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

மேற்கொண்ட செய்தி தற்பொழுது #Whatsapp மற்றும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
இச்செய்தி உண்மையல்ல, பொது மக்கள் மேற்கொண்ட பொய் செய்தியை நம்ப வேண்டாம்.
தோல்வியின் விரக்தியில் #BJP ‘னர் செய்யும் பித்தலாட்ட வேலை. இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. pic.twitter.com/Re7HHxeoh2

— Vasanthakumar (@vasanthakumarH) May 25, 2019

 

17 ஆவது மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்த குமார், மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டார். இதில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 661 வாக்குகள் வித்தியாசத்தில் வசந்த குமார் வெற்றிப்பெற்றார்.  

இந்நிலையில் கடந்த இராண்டு நாட்களாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்றால், முக்கிய அறிவிப்பு என்ற பெயரில், வங்கிகளில் மக்கள் விவசாய அடிப்படையில் வாங்கியிருக்கும் கடன்கள் முழுவதும் தள்ளுபடியாக இருப்பதால்  அனைவரும்  தங்கள் அருகாமையிலுள்ள வசந்த் அன் கோ நிறுவனத்தில் வருகிற  30-05-19 க்கும் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் கார்டு போன்றவற்றை எடுத்து நேரில் சென்று படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு ஹெச். வசந்த் குமார் எம்.பி என்ற பெயரில் குறுஞ்செய்தி வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டது. 

tt

இதற்கு வசந்த குமார் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அந்த பதிவில், “மேற்கொண்ட செய்தி தற்பொழுது #Whatsapp மற்றும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இச்செய்தி உண்மையல்ல, பொது மக்கள் மேற்கொண்ட பொய் செய்தியை நம்ப வேண்டாம். தோல்வியின் விரக்தியில் #BJP ‘னர் செய்யும் பித்தலாட்ட வேலை. இது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.