பாஜகவினரால் தாக்கப்பட்ட பியூஷ் மனுஷ்: மு.க.ஸ்டாலின் கண்டனம் !

 

பாஜகவினரால் தாக்கப்பட்ட பியூஷ் மனுஷ்: மு.க.ஸ்டாலின் கண்டனம் !

பாஜகவினர் சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மனுஷ் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவினர் சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மனுஷ் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

piyush

சேலம் பாஜக அலுவலகத்திற்கு நேற்று வந்த சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் காஷ்மீர் விவகாரம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து  கேள்வி எழுப்புவதற்காகச்   செருப்பு மாலையுடன் வந்திருந்தார். அப்போது அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம்  முற்றியதையடுத்து பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர்  தாக்குதல் நடத்தினர். இதில் காயமடைந்த பியூஸ் மனுஷை காவல்துறையினர் அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 

இந்நிலையில் பியூஸ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே #PiyushManush மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயல்களை அறவழியில் வேரறுப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அதேசமயம் பியூஸ் மனுஷுக்கு எதிராகக் கருத்து பதிவிட்டுள்ள தமிழக  பாஜக  மணிலா தலைவர் தமிழிசை, முகநூலில் பதிவிட்டுவிட்டு சேலம் பாஜக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பாஜக தொண்டர்களைத்தாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய  பியூஷ் மனுஷ் போன்ற சமூக விரோத செயல்பாட்டாளர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பொது அமைதி காக்கவேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.