பாசிப்பருப்பு பக்கோடா செய்முறை

 

பாசிப்பருப்பு பக்கோடா செய்முறை

வெங்காய பக்கோடா போல பாசிப்பருப்பு பக்கோடா செய்தால் மாறுதலான சுவையுடன் இருக்கும்.

வெங்காய பக்கோடா போல பாசிப்பருப்பு பக்கோடா செய்தால் மாறுதலான சுவையுடன் இருக்கும்.

தேவையானவை: 

பாசிப்பருப்பு மாவு – ஒரு கப்
பச்சரிசி மாவு – கால் கப்
நறுக்கிய வெங்காயம் – ஒரு கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: 

எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து, தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
சுவையான பாசிப்பருப்பு பக்கோடா ரெடி.
தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.