பாசத்தை பொழிந்து கொண்ட ஆரவ்- ஓவியா ஜோடி! 

 

பாசத்தை பொழிந்து கொண்ட ஆரவ்- ஓவியா ஜோடி! 

நடிகை ஓவியா நடிப்பில் இன்று வெளியான 90ml திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ஆரவ் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

சென்னை: நடிகை ஓவியா நடிப்பில் இன்று வெளியான 90ml திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ஆரவ் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ் மற்றும் ஓவியா பிக் பாஸ் வீட்டிலிருந்தபோதே காதல் கிசுகிசுவில் சிக்கினர். வெட்கத்தைவிட்டு வெளிப்படையாக ஆரவிடம் காதலைச் சொல்லியும், அவர் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட்டு பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து,பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் நண்பர்களாகச் சகஜமாகப் பழகி வருகின்றனர். 

இந்நிலையில், ஓவியா நடிப்பில் 90 ML திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், ‘இது  உன் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையான தருணம். இந்த படத்தின் உன்னுடைய கடின உழைப்பு மற்றும் அதனால் உருவான மன அழுத்தம் ஆகியவை பற்றி எனக்குத் தெரியும். அது ஒரு போது வீணாகாது. 90 எம்.எல் வெற்றியடைய வாழ்த்துகள்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகை ஓவியா, ‘மிக்க நன்றி ஸ்வீட் ஹார்ட், நீ சிறந்தவன்’ என்று பதிலளித்துள்ளார்.