பாக். கேப்டன் விட்டது கொட்டாவியை அல்ல, (உலக)கோப்பையை!

 

பாக். கேப்டன் விட்டது கொட்டாவியை அல்ல, (உலக)கோப்பையை!

இந்தியா பாகிஸ்தான் மேட்ச், அதுவும் உலககோப்பையில், கூடவே நான்கு போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று அரையிறுதி கனவே இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்ற இக்கட்டான நிலை, கண்களில் வெறி தெறிக்க மைதானத்தில் குழுமியிருக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் என இவ்வளவு ஹைலைட்டான விஷயங்கள் இருக்கும்போது, பாகிஸ்தான் வீரர்களிடத்தும், முக்கியமாக கேப்டனிமிருந்தும் எவ்வளவு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும்?

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்

நாடோடி மன்னன் படத்தில் வரும் தூங்காதே தம்பி தூங்காதே பாட்டில் வரும் வரிகள்:

இந்தியா பாகிஸ்தான் மேட்ச், அதுவும் உலககோப்பையில், கூடவே நான்கு போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்று அரையிறுதி கனவே இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்ற இக்கட்டான  நிலை, கண்களில் வெறி தெறிக்க மைதானத்தில் குழுமியிருக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் என இவ்வளவு ஹைலைட்டான விஷயங்கள் இருக்கும்போது, பாகிஸ்தான் வீரர்களிடத்தும், முக்கியமாக கேப்டனிமிருந்தும் எவ்வளவு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும்? ஆனா பாருங்க, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் மைதானத்தில் அதுவும் கவனமாக இருக்கவேண்டிய விக்கெட் கீப்பிங்கின்போது கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறார்.

Sarfraz yawning

உலககோப்பையை ஜெயிக்கிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் இந்தியாவை ஜெயித்துவிடவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு பாகிஸ்தான் ரசிகனின்/வீரரின் ஆசையாக இருந்திருக்கக்கூடும். ஏற்கெனவே இந்திய அணியிடம் உலககோப்பையில் ஆறுமுறை வேறு தோற்றாகிவிட்டது. ஏழாவது முறை அந்த தவறு நடந்துவிடக்கூடாது என்ற ஆசையோடு முதலில் பேட் செய்ய இந்திய அணியை அழைக்க, நம்மாட்கள் 300 ரன்களைக் கடந்து 47ஆவது ஓவரை ஆடிக்கொண்டிருக்கும்போது, மழை வந்ததால், அரைமணி நேரம் ஓய்வு கிடைத்தது. கிடைத்த கேப்பில் சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள சர்ஃப்ராஸ் ரெண்டு பர்கரை உள்ளே இறக்கியிருக்கிறார். மழை விட்டது, மேட்ச் துவங்கியது, சர்ஃப்ராஸுக்கு கண்ணை கட்டிக்கொண்டுவர, ரெண்டு சீஸ் பர்கரை ஒரேவாயில் அமுக்கும் அளவுக்கு வாயைத்திறந்து கொட்டாவி விட்டுவிட்டார். அவர் விட்டது கொட்டாவியை அல்ல, உலகக் கோப்பையை.

Mohammad Amir

இந்திய அணி 300 ரன்களை குவித்துக்கொண்டிருக்க, ஒருபக்கம் தனது பவுலிங்கால் வேகத்தடை போட்டுவந்த அமீர், விக்கெட் கீப்பிங்கின்போது சர்ஃப்ராஸ் கொட்டாவி விட்டதை பார்த்ததும் வெதும்பி விட்டாரம். உடனே சர்ஃப்ராஸிடம் போய் “கோடை இடி இடிக்கிற மாதிரி நான் இங்கே குமுறிகிட்டு இருக்கேன், நீ கூறுகெட்டத்தனமா கொட்டாவி விட்டுகிட்டு இருந்தா என்னடா அர்த்தம், என் பவுலிங்கைப் பார்த்து எத்தனை பேரு மயங்கியிருக்கான், அவுட்டாகி ஓடியிருக்கான், வாந்தி எடுத்திருக்கான் பேதி ஆகியிருக்கு, நான் இல்லேன்னா இந்நேரம் அவுங்க 500 அடிச்சிருப்பானுங்க‌” என எகிற, அதற்கு சர்ஃப்ராஸ் சிரிக்காமல் சொன்னாராம், “அட அது இல்ல அமிரு, எனக்கு எது புடிக்கலையோ அப்ப கொட்டாவி வந்துரும்”ன்னாராம்.