பாக்ஸர் படத்திற்காக கடுமையாக உழைக்கும் அருண் விஜய்! வைரலாகும் வீடியோ 

 

பாக்ஸர் படத்திற்காக கடுமையாக உழைக்கும் அருண் விஜய்! வைரலாகும் வீடியோ 

நடிகர் அருண் விஜய் நடிப்பில் நடிப்பில் உருவாகவுள்ள ‘பாக்ஸர்’ திரைப்படத்திற்காக அவர் எடுத்துக் கொள்ளும் பயிற்சி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் நடிப்பில் உருவாகவுள்ள ‘பாக்ஸர்’ திரைப்படத்திற்காக அவர் எடுத்துக் கொள்ளும் பயிற்சி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

தடம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் விஜய் பாக்ஸர் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். விவேக் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தை எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கவிருக்கிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகவுள்ள இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். 

படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், நடிகர் அருண் விஜய் ஒரு பாக்ஸராக தனது உடலை தயார் செய்து வருகிறார். அதற்காக வியட்நாமில் சென்று 7ஆம் அறிவு படத்தில் நடித்த Johnny Tri-Nguyen நடிகரிடம் தற்கப்பு கலைகளை கற்று வருகிறார்.  

அப்போது எடுக்கப்பட்ட விடியோவை நடிகர் அருண் விஜய் தனது ரசிகர்களுக்காக ட்விட்டர் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி பரவி வருகிறது.