பாக்சிங் பயிற்சியுடன் மாநாடு படத்துக்கு தயாராகும் சிம்பு.. வீடியோ உள்ளே !

 

பாக்சிங் பயிற்சியுடன் மாநாடு படத்துக்கு தயாராகும் சிம்பு.. வீடியோ உள்ளே !

ஜனவரி 20-ஆம் தேதி மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், சிம்பு எடையைக் குறைப்பதற்காக  ஹயாத்  ஹோட்டலில் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சில மாதங்களுக்கு முன்பு சிம்பு நடிக்க மாநாடு என்ற படத்தை எடுக்க இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார். இதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது சொன்ன நேரத்தில் சிம்பு கால்சீட் கொடுக்காமல் இழுத்தடித்தார். அதன் பிறகு,  இனி மாநாடு படத்தில் சிம்பு நடிக்க மாட்டார். என்ற அறிவிப்பை வெளியிட்டார். முதன் முறையாக சிம்புவை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று துணிச்சலுடன் சொன்னது சுரேஷ் காமாட்சிதான். இதனால் திரையுலகினர் அதிர்ச்சிஅடந்தனர். 

ttn

இந்நிலையில் இயக்குநர் சீமான் இந்த விஷயத்தில் தலையிட்டு சிம்புவிடம் பேசினார். தயாரிப்பாளரையும் சமாதானம் செய்து மாநாடு படத்தை மீண்டும் தொடங்க வைத்தார். சிம்புவை சந்தித்து மனம் விட்டு பேசினார் சுரேஷ் காமாட்சி. இதனால் சிம்பு மனம் மாறி அன்றே அய்யப்பன் கோவிலுக்கு மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பித்தார். அதோடு அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து ஹாரிங்டன் ரோடு பள்ளி மைதானத்தில் நடைப்பயிற்சியும், லீலா பேலஸ் ஹோட்டலில் நீச்சல் பயிற்சியும் எடுத்துக்கொள்கிறார்.  

ttn

ஜனவரி 20-ஆம் தேதி மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், சிம்பு எடையைக் குறைப்பதற்காக  ஹயாத்  ஹோட்டலில் குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வீடியோவை இயக்குநர் சுரேஷ் காமாட்சி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

அந்த வீடியோவிற்கு “சீக்கிரமா மாநாடு படத்தை தொடங்குங்க… இவர இப்படி பாத்து எவ்வளோ நாள் ஆச்சு.. சிம்புவின் வெறித்தனம்..”சிம்புவின் ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோ தற்போது வைரல்ஆகி வருகிறது.