‘பாகுபலி பிரபாஸை எனக்கு ரொம்ப பிடிக்கும்’நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் உருகுகிறார்…

 

‘பாகுபலி பிரபாஸை எனக்கு ரொம்ப பிடிக்கும்’நடிகை  ரிச்சா கங்கோபாத்யாய் உருகுகிறார்…

முன்னாள் மிஸ் இந்தியா ரிச்சா கங்கோபாத்யாய், தமிழில் ‘மயக்கம் என்ன’ படத்தில் தனுஷுடனும் மற்றும் ‘ஒஸ்தி’ படத்தில் சிம்புவுடனும் நடித்தார் .. ரிச்சா கங்கோபாத்யா தெலுங்கில் பாகுபலி ஹீரோ பிரபாஸுடன் மிர்ச்சியில் நடித்ததை பற்றி பகிர்ந்துள்ளார்.

முன்னாள் மிஸ் இந்தியா  ரிச்சா கங்கோபாத்யாய்,  தமிழில்  ‘மயக்கம் என்ன’ படத்தில் தனுஷுடனும் மற்றும்  ‘ஒஸ்தி’ படத்தில் சிம்புவுடனும் நடித்தார் .. ரிச்சா கங்கோபாத்யா தெலுங்கில் பாகுபலி ஹீரோ  பிரபாஸுடன் மிர்ச்சியில் நடித்ததை  பற்றி  பகிர்ந்துள்ளார்.அவர்  2013 ஆம் ஆண்டில், சினிமாவில்  உச்சத்திலிருந்தபோது   நடிப்பை விட்டுவிட்டு அமெரிக்காவில் தனது படிப்பைத் தொடர முடிவு செய்தார்.

richa-gangopadhyay

அவர்  வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஓலின் ஸ்கூல் ஆப் பிசினஸில் சேர்ந்தார். பின்னர் அவர் ஜோ லாங்கெல்லாவுடன் திருமணமாகி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார். ரிச்சா கங்கோபாத்யாய் மற்றும் ஜோ லாங்கெல்லா ’திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ மரபுகளுடன் நடந்தது.

சமீபத்தில் ரிச்சா கங்கோபாத்யாய் தனது ரசிகர்களுடன் சமூக ஊடகங்களில் உரையாடினார். பிரபாஸைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, ​​ரிச்சா கங்கோபாத்யாய், “பிரபாஸ் மிகவும் பணிவானவர் , அவர்  நான் விரும்பும் நடிகர்களில் ஒருவர்” என்று கூறினார்.

richa gangopathya

தனது 21 வயதில், ரிச்சா கங்கோபாத்யாய் மிஸ் இந்தியா மிச்சிகன் போட்டியின் வெற்றியாளரானார், 2007 ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ வில் வென்றார் . அவர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில்  ‘லீடர்’ மூலம் அறிமுகமானார், பின்னர் பிரபாஸ் நடித்த மிர்ச்சி, நாகவல்லி மற்றும் பாய் போன்ற சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்தார்