பாகுபலியில் காளகேயர்கள் பேசும் கிளிக்கி மொழியை நீங்களும் கற்றுக்கொள்ளலாம்: மதன் கார்க்கியின் புதிய முயற்சி!

 

பாகுபலியில் காளகேயர்கள் பேசும்  கிளிக்கி மொழியை நீங்களும் கற்றுக்கொள்ளலாம்: மதன் கார்க்கியின் புதிய முயற்சி!

இந்தியாவைத் தாண்டி  உலகளவில் சாதனை படைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான  ‘பாகுபலி’ திரைப்படம் படம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகி வசூலைக் குவித்தது. பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் நடித்த அந்தப் படம், சுமார் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.  பாகுபலி இந்தியாவைத் தாண்டி  உலகளவில் சாதனை படைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 

ttn

குறிப்பாக பாகுபலி படத்தில் காளகேயர்கள் பயன்படுத்தும் `கிளிக்கி’ மொழியை இலக்கண விதிகளோடு முழுவதுமாக உருவாகியிருக்கிறார் வைரமுத்து மகனும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி. பாகுபலி படத்தின் போது அந்த படத்துக்கு தேவையான  700 வார்த்தைகள், 40 இலக்கண விதிகளை  உருவாக்கி தந்த மதன் கார்க்கி.  

ttn

நிறைய பேர் இந்த மொழிய கற்றுதர முடியுமா என்று கேள்வி எழுப்பியதால் தற்போது அதற்கு முழுவடிவம் கொடுத்துள்ளார். இதற்காக ‘Kiliki.in’  என்ற வலைத்தளத்தை மதன் கார்க்கி உருவாகியுள்ளார். 

இந்நிலையில் உலக தாய்மொழிகள் தினத்தை முன்னிட்டு இயக்குநர் ராஜமௌலி  ‘Kiliki.in’ வலைதளத்தையும் கிளிக்கி மொழியையும் இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த மொழியை கற்றுக்கொள்ள விரும்புவோர் அதை பயன்படுத்தலாம்.  ராஜ மௌலி கிளிக்கி மொழியை வெளியிட்டுள்ளதற்கு மதன் கார்க்கி டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.