பாகுபலியின் கெஸ்ட் ஹவுஸிற்கு சீல்; உயர் நீதிமன்றத்தை அனுகிய பிரபாஸ்!

 

பாகுபலியின் கெஸ்ட் ஹவுஸிற்கு சீல்; உயர் நீதிமன்றத்தை அனுகிய பிரபாஸ்!

‘​​​​​​​பாகுபலி’ புகழ் நடிகர் பிரபாஸின் கெஸ்ட் ஹவுஸிற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்ததை எதிர்த்து நடிகர் பிரபாஸ் நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.

தெலங்கானா: பாகுபலி’ புகழ் நடிகர் பிரபாஸின் கெஸ்ட் ஹவுஸிற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்ததை எதிர்த்து நடிகர் பிரபாஸ் நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ரயாதுர்காம் பகுதியில் உள்ள நடிகர் பிரபாஸின் கெஸ்ட் ஹவுஸிற்கு அரசு அதிகாரிகள் சீல வைத்து பூட்டியுள்ளனர். ரயாதுர்காம் பகுதியில் சர்வே எண்: 46ன் கீழ் சுமார் 83 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அதனை அகற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த சர்வே எண்: 46-ல் நடிகர் பிரபாஸின் கெஸ்ட் ஹவுஸும் அடங்கியுள்ளது.

prabhas

அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் தெலங்கானா அரசுக்கு சாதகமாக வந்த தீர்ப்பை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடிகர் பிரபாஸ் உயர் நீதிமன்றத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் தனது கெஸ்ட் ஹவுஸிற்கு சீல் வைத்ததாக மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2005-2006ம் ஆண்டு, ரூ.1.05 கோடி மதிப்பில் பிரபாஸ் இந்த கெஸ்ட் ஹவுஸை வாங்கி பதிவு செய்ததாக பிரபாஸ்ச் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பிரபாஸின் பதிவு விண்ணப்பம் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும், ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடத்தை இடிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரம் தெலுங்கு திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.