பாகிஸ்தான், வங்காளதேச இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் – சிவசேனா கருத்து

 

பாகிஸ்தான், வங்காளதேச இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் – சிவசேனா கருத்து

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

மும்பை: பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இந்தியா முழுவதிலும் உள்ள முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிவசேனாவுக்கு சொந்தமான சாம்னா பத்திரிகையில் சர்ச்சையான தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “சிவசேனா எப்போதும் இந்துத்துவாவுக்காக போராடியது. குடியுரிமை திருத்த சட்டத்தில் ஓட்டைகள் பல இருக்கின்றன. அவை யாவும் சரிசெய்யப்பட வேண்டும். மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளில் பாஜகவால் செய்ய முடியாத பணிகளை மகா கூட்டணி வெறும் 50 நாட்களில் நிகழ்த்தி காட்டியுள்ளது.” என சிவசேனா அந்த தலையங்கத்தில் கூறியுள்ளது.