பாகிஸ்தான் ராணுவ அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவபொம்மை!

 

பாகிஸ்தான் ராணுவ அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவபொம்மை!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி ராணுவ போர் அருங்காட்சியகத்தில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது. 
கடந்த பிப்ரவரி 27ம் தேதி, இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானப்படை விமானங்களை விரட்டியபடி பாகிஸ்தானுக்குள் நுழைந்தார் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன். இதில், அபிநந்தன் பயணித்த இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி ராணுவ போர் அருங்காட்சியகத்தில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது. 
கடந்த பிப்ரவரி 27ம் தேதி, இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானப்படை விமானங்களை விரட்டியபடி பாகிஸ்தானுக்குள் நுழைந்தார் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன். இதில், அபிநந்தன் பயணித்த இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அபிநந்தனும் சிறைபிடிக்கப்பட்டார். சர்வதேச போர் விதிமுறைகள் படி அபிநந்தனை பாகிஸ்தான் மார்ச் 1ம் தேதி விடுதலை செய்தது. 

abinanthan

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் அபிநந்தன் கைது செய்யப்பட்டது போன்ற காட்சியை உருவாக்கி அதை கராச்சியில் உள்ள ராணுவ போர் அருங்காட்சியகத்தில் பாகிஸ்தான் வைத்துள்ளது. இதைப் புகைப்படம் எடுத்து லோடி என்பவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதில், அபிநந்தன் கையில் ஒரு டீ கப் கொடுத்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும் என்று கிண்டல் செய்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது போன்ற காட்சியைக் கண்காட்சியாக வைத்திருப்பதன் மூலம் பாகிஸ்தானின் தரம் தாழ்ந்த செயல்பாடு வெளிப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.