பாகிஸ்தான் மீது விமான படை தாக்குதல் நடத்த தயாராக இருந்தது ஆனால் அரசுதான் மறுத்து விட்டது- விமான படையின் முன்னாள் தளபதி தகவல்

 

பாகிஸ்தான் மீது விமான படை தாக்குதல் நடத்த தயாராக இருந்தது ஆனால் அரசுதான் மறுத்து விட்டது- விமான படையின் முன்னாள் தளபதி தகவல்

2001ல் நடந்த நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்று விமானப்படை கூறியதை மத்திய அரசு நிராகரித்து விட்டது என விமானப்படையின் முன்னாள் தளபதி பி.எஸ். தானோ தெரிவித்தார்.

மும்பையில் வி.ஜே.டி.ஐ.ன் ஆண்டு விழா நிகழச்சி நடைபெற்றது. இதில் இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி பிரேந்தரர் சிங் தானோ கலந்து கொண்டார். மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான கூட்டத்தில் தானோ பேசுகையில் கூறியதாவது: 2001 டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்திய போர் விமானங்கள்

இந்த சம்பவத்துக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது கடுமையான தாக்குதல் நடத்த இந்திய விமானப்படை மத்திய அரசிடம் பரிந்துரை செய்தது. பாகிஸ்தானில் எங்கெல்லாம் தீவிரவாத முகாம்கள் உள்ளது என்று எங்களுக்கு தெரியும். ஆனால் தாக்குதல் நடத்துவதா அல்லது வேண்டாமா என்பது அரசியல் முடிவு. மத்திய அரசு விமானப்படையின் கோரிக்கையை நிராகரித்து விட்டது.

இந்திய விமான படை

நாளை குறுகிய மற்றும் விரைவான போர்களை எதிர்கொள்ளும் திறன் இந்திய விமானப்படைக்கு உள்ளது. எதிர்காலத்தில் எந்தவொரு யுத்தமும் நிலம், காற்று, கடல் மற்றும் விண்வெளியில் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். பிரேந்தர் சிங் தானோ, 2016 டிசம்பர் 31 முதல் 2019 செப்டம்பர் 30ம் தேதி வரை விமான படை தளபதியாக இருந்தார்.