பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து!

 

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து!

பிரதமர் அலுவலகத்தின் ஆறாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது, பிரதமர் இம்ரான் கான், ஐந்தாவது தளத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்துள்ளார்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் இம்ரான் கான் அந்நாட்டு பிரதமராக உள்ளார்.

pakistan pm office

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிரதமர் அலுவலகத்தின் ஆறாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்ட போது, பிரதமர் இம்ரான் கான், ஐந்தாவது தளத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்துள்ளார்.

imran khan

தீ விபத்துக்கு இடையேயும் பிரதமரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, சம்பவம் குறித்து அதிகாரிகள் இம்ரான் கானிடம் மீண்டும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அதிகாரிகளை அங்கிருந்து உடனடியாக முதலில் வெளியேறுமாறு இம்ரான் கான் கூறியுள்ளார்.

pakistan pm office

இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஊழியர்களை வெளியேற்றும் பணியில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் வாசிங்க

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு; நீட் தேர்வு ரத்து குறித்த அறிவிப்பு இல்லை-முழு விவரம்!