பாகிஸ்தான் – திமுக உறவு… உதயநிதி வன்முறையை தூண்டும் பின்னணி..!  

 

பாகிஸ்தான் – திமுக உறவு… உதயநிதி வன்முறையை தூண்டும் பின்னணி..!  

பாகிஸ்தான் நினைப்பதை திமுக செய்ய துடிக்கிறது. பாகிஸ்தான் திமுக உறவு நாட்டின் சாபம். நாட்டில் வன்முறை எந்த காலத்திலும் எதற்கும் தீர்வாகாது என அரசியல் விமர்சகர் மாரிதாஸ் விமர்சித்துள்ளார். 

Maridhas

முன்னதாக, ‘தலைவர் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் #CAA2019 எதிர்ப்பு பேரணியில் அனைவரும் பங்கெடுப்போம். உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு ‘வன்முறை’ என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களைச் சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்’என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்து இருந்தார். அவர் ரஜினி சொன்ன அறிக்கையை சுட்டிக்காட்டி இப்படி கருத்து பதிவிட்டு இருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரசியல் விமர்சகர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’உதயநிதி டிவிட் மூலம் ஒரு விசயம் நன்கு புரிகிறது. திமுக வட்டம் நிச்சயம் வன்முறை நடத்தத் திட்டமிட்டுள்ளது. ரஜினி வன்முறை தீர்வாகாது என்று சொன்னதும் அதற்கு எதிராக கொதிக்கிறது. பாகிஸ்தான் நினைப்பதை திமுக செய்ய துடிக்கிறது. பாகிஸ்தான் திமுக உறவு நாட்டின் சாபம். நாட்டில் வன்முறை எந்த காலத்திலும் எதற்கும் தீர்வாகாது. 

 

அதுவும் அகதிகளாக ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்து அங்கே வன்முறை செய்வதெல்லாம் வேற எந்த நாட்டிலும் நடக்காது. அதற்கு ஆதரவாக அரசியல் செய்யும் திமுக போன்ற கட்சிகள் நாட்டின் சாபம். திமுக ஒரு தீயசக்தி. ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 இந்துக்கள் பாகிஸ்தானை விட்டு இந்தியா செல்கிறார்கள். காரணம் கட்டாய மதமாற்றம், இந்து பெண்களுக்குப் பாதுகாப்பின்மை. இதைப் பாகிஸ்தான் எம்.பி சொல்கிறார்.

அந்த அராஜகம் செய்யும் பாகிஸ்தான் அடிப்படைவாதிகளுக்கும் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று போராடுகிறது திமுக.  மேடைகளில் உளறுகிறார் என்றால் சரி என்று சகித்துக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு மேடையிலும், பேட்டியிலும் உளறல்கள்! யாதும் ஊரே யாவரும் கேளிர் – திருவள்ளுவர் என்கிறார் ஸ்டாலின். இதை எல்லாம் என்ன செய்ய? வசன பேச்சால் வளர்ந்த திமுக; ஸ்டாலின் பேச்சால் அழிந்தது என்றாக வரலாறு எழுதப்படலாம்’’ எனத்தெரிவித்துள்ளார்.