பாகிஸ்தான் சிறைபிடித்த அபிநந்தன் இன்று நாடு திரும்புகிறார்!

 

பாகிஸ்தான் சிறைபிடித்த அபிநந்தன் இன்று நாடு திரும்புகிறார்!

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட  இந்திய விமானி அபிநந்தன் இன்று நாடு திரும்புகிறார்.

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட  இந்திய விமானி அபிநந்தன் இன்று நாடு திரும்புகிறார்.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

imran ttn

கடந்த 26ம் தேதி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. அப்போது விரட்டிச் சென்ற இந்திய விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டது. அதிலிருந்த இந்திய விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் தப்பிய நிலையில் எதிர்பாராத விதமாக  பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை பாகிஸ்தான் சிறை பிடித்தது.

army ttn

இதையடுத்து அபிநந்தனை விடுவிக்க கோரி பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி இன்று விடுவிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.  

இந்நிலையில், விமானி அபிநந்தன் பஞ்சாப் மாகாணம் வாகா எல்லையில்  விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லது அபிநந்தன் விமானம் மூலம் டெல்லி, மும்பை அல்லது அமிர்தசரஸ் அழைத்து வரப்படுவார் எனவும் கூறப்படுகிறது. 

முன்னதாக பாகிஸ்தானிலிருந்து இன்று  இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் விமானி அபிநந்தனின் பெற்றோர் அவரை வரவேற்கச் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.