பாகிஸ்தான் அணியின் விராட் கோஹ்லி இவர் தான்; மைக்கெல் கிளார்க் ஆரூடம் !!

 

பாகிஸ்தான் அணியின் விராட் கோஹ்லி இவர் தான்; மைக்கெல் கிளார்க் ஆரூடம் !!

பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான பாபர் அசாம், பாகிஸ்தான் அணியின் விராட் கோஹ்லி என முன்னாள் வீரர் மைக்கெல் கிளார்க் பாராட்டு தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான பாபர் அசாம், பாகிஸ்தான் அணியின் விராட் கோஹ்லி என முன்னாள் வீரர் மைக்கெல் கிளார்க் பாராட்டு தெரிவித்துள்ளார். 

michael clake

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தும், உலகக்கோப்பையில் விளையாட உள்ள வீரர்கள் குறித்தும் முன்னாள் வீரர்கள் பலர் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
அந்த வகையில், இந்த தொடர் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான மைக்கெல் கிளார்க், பாகிஸ்தான் அணி இந்த தொடரில் அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 

virat

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் குறித்து பேசிய மைக்கல் கிளார்க், பாபர் ஆஸம் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் பாகிஸ்தானின் விராத் கோஹ்லி. அந்த அணி, அரையிறுதி அல்லது இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் இளம் வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டும்’’ என்றார்.