பாகிஸ்தானை 10 நாளில் முடிச்சிடுவேன்! – மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசிய மோடி

 

பாகிஸ்தானை 10 நாளில் முடிச்சிடுவேன்! – மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசிய மோடி

என்.சி.சி மாணவர்களின் வருடாந்திர பேரணி டெல்லியில் நேற்று (ஜனவரி 28ம் தேதி) நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிறகு, மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

 

இந்தியா நினைத்தால் பாகிஸ்தானை பத்தே நாளில் மண்ணைக் கவ்வ வைக்க முடியும் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்.சி.சி மாணவர்களின் வருடாந்திர பேரணி டெல்லியில் நேற்று (ஜனவரி 28ம் தேதி) நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிறகு, மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

ncc-rally-delhi

“பாகிஸ்தான் நம்முடன் மூன்று போர்களை நடத்தி தோற்றுவிட்டது. ஆனாலும், இந்தியாவுக்கு எதிரான நிழல் யுத்தத்தை நடத்தி வருகிறது. நம்முடைய நாட்டில் முன்பு இருந்த அரசாங்கங்களின் செயலற்ற தன்மை காரணமாக அவர்கள் நிழல் போரை சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்த்தார்கள். ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவம் அனுமதி கேட்டால் கூட அனுமதி அளிக்காமலிருந்தார்கள். பாகிஸ்தானை மண்ணைக் கவ்வ வைக்க இந்திய படைக்கு ஒரு வாரம் 10 நாட்களுக்கு மேல் தேவைப்படாது” என்ற பிரதமர் மோடி அதன்பிறகு மாணவர்கள் மத்தியில் அரசியல் பேச ஆரம்பித்தார்.

“சில கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றன. புதிய சட்டங்களை எதிர்ப்பதன் மூலம், இந்த கட்சிகள் தலித்துக்கள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளை எதிர்க்கிறார்கள். பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுபவர்கள், துன்புறுத்தல் காரணமாக அங்கிருந்து வந்த பெரும்பாலானோர் அத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். 

ncc-rally

பாகிஸ்தான் ராணுவம் துப்புரவுப் பணி காலியிடங்களுக்கு ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அதில், முஸ்லிம் அல்லாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கூறியுள்ளது. பாகிஸ்தானில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் அப்படித்தான் நடத்தப்படுகிறார்கள். கடந்த கால தவற்றை சரி செய்யவே குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தோம். நேரு – லியாகத் இடையே சிறுபான்மையினர் பாதுகாப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காந்தியடிகளும் இதையே விரும்பினார். மத்திய அரசு சிஏஏ அறிமுகம் செய்ததன் மூலம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது” என்றார். 

மோடியின் இந்த அரசியல் பேச்சு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. முந்தைய அரசுகள் என்றால் வாஜ்பாய் அரசையும் அவர் குறிப்பிடுகிறாரா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.