பாகிஸ்தானுக்கு உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்கும் இந்தியா! பணிந்தது பாகிஸ்தான்!

பாகிஸ்தானுக்கு உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பி வைக்கும் இந்தியா! பணிந்தது பாகிஸ்தான்!

இந்தியாவுடனான அனைத்து விதமான வர்த்தக உறவுகளையும் பாகிஸ்தான் முறித்துக் கொண்டது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் காரணமாக சுட்டிக்காட்டியது. இதைத் தொடர்ந்து இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதுடன் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரையும் திரும்ப அழைத்துக் கொண்டது. 

pakistan

இருநாடுகளுக்கிடையே சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது. இந்நிலையில் உயிர்காக்கும் மருந்து பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய பாகிஸ்தான் வர்த்தகத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 16 மாதங்களில், இந்தியாவில் இருந்து 36 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு உள்ள ரேபிஸ் நோய் தடுப்பு மற்றும் விஷ முறிவு மருந்துகளை பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளிடம் எல்லாம் காஷ்மீர் விவகாரத்தில் பஞ்சாயத்துக்குப் போன பாகிஸ்தானுக்கு எல்லா நாடுகளுமே கைவிரித்து விட்டன.

medicines

கடைசி அஸ்திரமாக இரு நாடுகளுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது என்றெல்லாம் பூச்சாண்டிக் காட்டியது. அதற்கும் பலன் இல்லாமல் போகவே கடைசியாக பணிந்தது பாகிஸ்தான். இந்தியாவில் இருந்து மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது.