பாகிஸ்தானில் 1 லிட்டர் பால் ரூ.140க்கு விற்பனை.. இதுக்கும் இந்தியாதான் காரணமா?

 

பாகிஸ்தானில் 1 லிட்டர் பால் ரூ.140க்கு விற்பனை.. இதுக்கும் இந்தியாதான் காரணமா?

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை காட்டிலும் அதிக விலைக்கு பால் விற்கப்படுகிறது. நல்ல வேளையாக இதுக்கும் இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் அமைச்சர்கள் யாரும் கூறவில்லை.

பாகிஸ்தானில் நேற்று முஹரம் கடைப்பிடிக்கப்பட்டது. பொதுவாக முஹரம் சமயத்தில் பாலுக்கான தேவைப்பாடு அங்கு அதிகமாக இருக்கும். இதனால் அந்த சமயத்தில் பாலின் விலை உயர்வதும் சகஜம்தான். இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தேவை அதிகமாக இருந்ததால் கராச்சி நகர் முழுவதும் ஒரு லிட்டர் பால் ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையானது. பால் விலை தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறுகையில், முஹரம் சமயத்தில் பாலின் விலை உயர்வது சகஜம்தான் ஆனால் என் வாழ்க்கையில் இந்த அளவுக்கு உயர்ந்ததை இதுவரை பார்த்தது இல்லை என பலர் தெரிவித்தனர்.

பால்

பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113க்கும், டீசல் ரூ.91க்கும் விற்பனையாகிறது. ஆனால் அதனை காட்டிலும் பால் விலை அதிகமாக உள்ளது. ஒரு லிட்டர் பால் ரூ.140க்கு விற்பனை செய்யப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பால் உயர்வு அந்நாட்டின் சிதைந்து கிடக்கும் பொருளாதாரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

பன்னாட்டு நிதியம்

நிதிநெருக்கடியால் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்க இந்த மாதம் அந்நாட்டுக்கு தனது குழுவை அனுப்ப பன்னாட்டு நிதியம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.