பாகிஸ்தானில் போலீசாகும் முதல் இந்து பெண்! | குவியும் வாழ்த்துகள்!

 

பாகிஸ்தானில் போலீசாகும் முதல் இந்து பெண்! | குவியும் வாழ்த்துகள்!

நமது இந்தியாவில் முஸ்லீம்கள் இருப்பதைப் போலவே பாகிஸ்தானிலும் சுமார் 75 லட்சத்திற்கு மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிந்து மாகாணத்தில் தான் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். அப்படி சிந்து மாகாணத்தில் வசித்து வரும் ஒரு இந்து பெண்மணி காவல்துறை உதவி ஆய்வாளராக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

நமது இந்தியாவில் முஸ்லீம்கள் இருப்பதைப் போலவே பாகிஸ்தானிலும் சுமார் 75 லட்சத்திற்கு மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சிந்து மாகாணத்தில் தான் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். அப்படி சிந்து மாகாணத்தில் வசித்து வரும் ஒரு இந்து பெண்மணி காவல்துறை உதவி ஆய்வாளராக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். பாகிஸ்தான் காவல்துறையில் முதல் இந்து பெண் அதிகாரியாக பணியில் அமர்த்தப்பட்ட பெருமைக்கும் உரியவராகிறார் புஷ்பா. 

pushpa

பாகிஸ்தான், சிந்து மாகாணத்தை சேர்ந்த புஷ்பா கோலி என்பவர், காவலர் போட்டித் தேர்வு எழுதி அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார். தற்போது பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புஷ்பாவிற்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.  இதற்கு முன்னர் இதே வருடத்தில் பாகிஸ்தானின் முதல் பெண் நீதிபதியாக போடானி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.