பாகிஸ்தானில் பாகிஸ்தானியர்களுக்கே பாதுகாப்பு இல்லை! இந்தியாவிடம் அடைக்கலம் கேட்கும் முன்னாள் எம்.எல்.ஏ 

பாகிஸ்தானில் பாகிஸ்தானியர்களுக்கே பாதுகாப்பு இல்லை! இந்தியாவிடம் அடைக்கலம் கேட்கும் முன்னாள் எம்.எல்.ஏ 

பாகிஸ்தானில் சிறுபான்மையருக்கு மட்டுமல்ல இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என இம்ரான் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பல்தேவ் குமார் தெரிவித்துள்ளார்

பாகிஸ்தானில் சிறுபான்மையருக்கு மட்டுமல்ல இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என இம்ரான் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பல்தேவ் குமார் தெரிவித்துள்ளார்

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பல்தேவ் குமார் ஒரு சீக்கியர். இவர் கைபர் பாக்துங்வா மாகாணத்தின் பரிகோட் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். இவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கன்னா பகுதியில் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இவரது மனைவி பாவனா, கன்னா பகுதியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது பல்தேவ் குமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. 

former Sikh lawmaker

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்தேவ் குமார், “பாகிஸ்தானில் சிறுபான்மையருக்கு மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பு இல்லை. பல இன்னல்களுக்கு மத்தியில் வாழக்கூடிய சூழல் உள்ளது. பாகிஸ்தான் ராணுவமும் ஐஎஸ்ஐ அமைப்பும் இம்ரான் கானுக்கு உத்தரவிட்டு அதன்படி செயல்பட வைக்கின்றன. மேலும் பல சீக்கியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றன. 

எனவே எனது குடும்பத்துடன் இந்தியாவில் குடியேற விரும்புகிறேன். எனக்கு பாகிஸ்தானில் வாழ விரும்பவில்லை. தயவுக்கூர்ந்து தனக்கு இந்திய அரசு அடைக்கலம் தர வேண்டும். இது குறித்து மோடி தலைமையிலான மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.