பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்…! இந்தியாவிலும் எதிரொலித்த பாதிப்பு!

பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்…! இந்தியாவிலும் எதிரொலித்த பாதிப்பு!

பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், பாகிஸ்தானில் உள்ள லாகூர் பகுதியின் வடமேற்கு திசையில் சரியாக இன்று மாலை 4:31 மணியளவில் ஏற்பட்டது. சுமார் 40 கி.மீ ஆழத்தில் இருந்த இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகளில் பதிவாகியுள்ளது.

earthquake

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலில், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர நிலநடுக்கத்தின் பாதிப்பு இந்தியாவிலும் உணரப்பட்டது என்றும் குறிப்பாக இந்தியா மாநிலங்களான  பஞ்சாப், டெல்லி, ஜம்மு – காஷ்மீர் போன்ற பகுதிகளில் இந்த நிலநடுக்கம்  உணரப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

earthquake

திடீரென இன்று மாலை நிலநடுக்கத்தை உணர்ந்த  பொது மக்கள், உடனடியாக தங்கள் வீடுகளையும், அலுவலகங்களையும் விட்டு வெளியேறி சாலைகளில் குவிந்தனர். நிலநடுக்கத்தை பற்றி மக்கள் தங்கள் கருத்துக்களையும்,  தங்கள் பகுதிகளில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 
இந்த பயங்கர நிலநடுக்கத்தினால், பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சாலைகளில் அதிகளவிலான நிலப்பிளவு ஏற்பட்டது என்று அறியப்படுகிறது.