பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தல்..இந்தியாவின் முக்கிய கடத்தல் மன்னர்கள் கைது!

 

பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தல்..இந்தியாவின் முக்கிய கடத்தல் மன்னர்கள் கைது!

இன்று காலை ரஞ்சித் ராணாவும், சுகன்தீப் போலாவும் இன்று காலை பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிர்சா மாவட்டத்தில் வசித்து வந்து நபர் ரஞ்சித் ராணா. இந்தியாவிலேயே முக்கியமான போதைப்பொருள் கடத்தும் செயலில் ஈடுபடும் இவரை, போதைப்பொருள் வட்டாரத்தில் சீட்டா என்றும் அழைக்கிறனர். இவருடன் சேர்ந்து இவரது தம்பியும் சுகன்தீப் போலா போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று காலை ரஞ்சித் ராணாவும், சுகன்தீப் போலாவும் இன்று காலை பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ttn

இதனை பற்றி பேசியா பஞ்சாப் காவல் துறைத் தலைமை இயக்குநர் தின்கர் குப்தா, ரஞ்சித் ராணா கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய-பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில் இருந்து 532 கிலோ போதைப்பொருளை கடத்தியதற்காக கைது செய்யப்பட்டதாகவும் சகோதரர்கள் இருவரும் இணைந்து கடந்த 2018-19 ஆம் ஆண்டு உப்பு மூட்டைகளில் வைத்து போதைப்பொருள் கடத்தியதாகவும் கூறியுள்ளார்.

ttn

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், பாகிஸ்தான் எல்லை பஞ்சாப் எல்லையுடன் இருப்பதால் அங்கிருந்து இவர்கள் போதைப்பொருள் கடத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார்.