பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்க வழக்கு

 

பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்க வழக்கு

இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு தொடுக்கப்பட்டுள்ளது.

லாகூர்: இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு தொடுக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. பாகிஸ்தான் கலைஞர்களை இந்திய திரையுலகம் புறக்கணித்தது. பாலிவுட்டில் பணிபுரியும் பாகிஸ்தான் பாடகர்கள், நடிகர்கள் என அனைவருக்கும் தடை விதிக்க இந்திய அரசாங்கம் முடிவு செய்ததற்கு பதிலாக இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்க லாகூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு தொடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி கொள்கை விதி 2016-ஐ சுட்டிக்காட்டி ஷேக் முகமது லதிப் என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். இந்திய திரைத்துறை சார்ந்த வணிகம் முதலியவற்றை முடக்கவும் அதில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.