பாகிஸ்தானில் அமெரிக்க தூதர்கள் – தாலிபான் பிரதிநிதிகள் சந்திப்பு!!

 

பாகிஸ்தானில் அமெரிக்க தூதர்கள் – தாலிபான் பிரதிநிதிகள் சந்திப்பு!!

தாலிபான் அமைப்புடன் அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் அமைதி தூதரை தாலிபான் பிரதிநிதிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். தாலிபான் அமைப்புடன் அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தாலிபான் அமைப்பு அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருவதால், தொடர்ந்து போர் நிலவி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தரப்பு தாலிபான் அமைப்பிடம் அமைதிக்கான பேச்சுவார்த்தையை நடத்த முடிவு செய்தது. 

taliban

பேச்சுவார்த்தை நடைபெறும் ஓரிரு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் ராணுவத்தை குறிவைத்து தாலிபான் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் தாலிபான் அமைப்பு உடனான அமைதி பேச்சுவார்த்தையை உடனடியாக நிறுத்திக் கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

ஆனால் ஆப்கானிஸ்தான் தரப்பு தொடர்ந்து அமைதிக்கான பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்துமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. இதற்கு தாலிபான் அமைப்புகளும் தயாராக இருக்கும் நிலையில், முன்னறிவிப்பின்றி தாலிபான் தாக்குதல் நடத்தியதால் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு மறுத்து வருகிறார். 

taliban

பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவின் அமைதி தூதர் ஜல்மே கலீல் ஜாத்தை சந்தித்து முல்லா அப்துல் கனி பரடர்  தலைமையில் தாலிபன் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தற்போது தாலிபான் மற்றும் அமெரிக்க இடையேயான அமைதிக்கான பேச்சு வார்த்தை நடைபெறுவது கடினம் என தெரியவந்துள்ளது.