பாகிஸ்தானியருக்கு சொந்த செலவில் தண்ணி காட்டும் இந்தியர்

 

பாகிஸ்தானியருக்கு சொந்த செலவில் தண்ணி காட்டும் இந்தியர்

போதுமான சாலை வசதிகள் இல்லை.மருத்துவமனைக்கு போக வேண்டுமானால் குறைந்தது 50 கி.மீ பயணிக்க வேண்டும். பிரதான சாலைகளை அடையவே 25 கிமீட்டர் நடந்து போக வேண்டும்.

பாகிஸ்தானில் சிந்த் மாநிலத்தின் தர்பார்கர் மாவட்ட மக்களுக்கு,தன் சொந்த செலவில் குடிநீர் வசதி செய்து தந்திருக்கிறார் துபாயில் வசிக்கும் இந்தியத் தொழிலதிபர் ஒருவர்.

pakistan

இந்தியாவின் செளதார்களும்,பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறையும் 70 வருடமாக ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டும்,கொன்றுகொண்டும் இருக்கையில் பாகிஸ்தானில் வரண்ட பகுதியில் குடிக்க நீர்கூட இல்லாமல் துன்பப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கிறார் ஜோகிந்தர் சிங் சலாரியா.

ஐநா அறிக்கையின்படி இந்த மாவட்டம் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கிறது.போதுமான சாலை வசதிகள் இல்லை.மருத்துவமனைக்கு போக வேண்டுமானால் குறைந்தது 50 கி.மீ பயணிக்க வேண்டும். பிரதான சாலைகளை அடையவே 25 கிமீட்டர் நடந்து போக வேண்டும்.

pakistan

பள்ளி வசதியும் இல்லை.இருக்கும் ஒரு சில பள்ளிகளின் நிலையோ மிகவும் மோசம்.கடும் வறுமையில் வாடும் அந்த மக்கள்,குடிநீருக்கும் தினமும் பல மைல் தூரம் நடக்க வேண்டும்.இப்போது இந்த கொடுமையிலிருந்து அந்த மக்களை காப்பாற்றி இருக்கிறார் இந்தியரான ஜோகீந்தர் சிங்.

துபாயில் சரக்குப் போக்குவரத்து தொழில் செய்யும் ஜோகீந்தர் 1993-ம் ஆண்டு ஐக்கிய அரபு குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகிறார்.அங்கே ‘பெஹல்’ என்கிற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்திவருகிறார்.

pakistan

வலைத்தளங்கள் மூலம் தர்பார்கர் மாவட்ட மக்களின் துண்பத்தை அறிந்து களத்தில் இறங்கிய ஜோகீந்தர் சிங் மாவட்டம் முழுவதும் 64 இடங்களில் ஆழ்குழாய் கிணறும் ,அடி பம்புகளும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.