பாகிஸ்தானின் லாகூர் வான்பகுதியில் ஏலியனா? – திகைக்க வைக்கும் வீடியோ உள்ளே!

 

பாகிஸ்தானின் லாகூர் வான்பகுதியில் ஏலியனா? – திகைக்க வைக்கும் வீடியோ உள்ளே!

பாகிஸ்தானின் லாகூர் வான்பகுதியில் கருமையான வளையம் போன்ற வடிவம் பறந்து சென்றது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லாகூர்: பாகிஸ்தானின் லாகூர் வான்பகுதியில் கருமையான வளையம் போன்ற வடிவம் பறந்து சென்றது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகில் பல காலமாகவே வேற்றுகிரகவாசிகள் மற்றும் பறக்கும் தட்டு பற்றி பேச்சு அடிபட்டு வருகிறது. எல்லா நாட்டு மக்களும் இது பற்றி இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பேசுகிறார்கள். ஏலியன்ஸ் மற்றும் பறக்கும் தட்டு தொடர்பாக இதுவரை ஆயிரக்கணக்கான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளிவந்துள்ளன. இருப்பினும் இந்த கருத்திற்கு அறிவியல்ரீதியான, நிரூபிக்கப்பட்ட ஒரு சான்று என எதுவுமே இல்லை என்றே கூறலாம். இந்நிலையில், புதியதாக ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின் லாகூர் வான்பகுதியில் அந்த வீடியோ படம்பிடிக்கப்பட்டுள்ளது. கருமையான வளையம் போன்ற வடிவம் வானில் பறந்து செல்கிறது. ஆனால் அது என்ன என்பது பற்றி யாராலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. லாகூர் சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவரால் அந்த வீடியோ படம்பிடிக்கப்பட்டுள்ளது. ஆலையில் இருந்து வெளியேறும் புகையால் ஏற்பட்ட வளையமாக இருக்கலாம் அல்லது ஏதேனும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய மெல்லிய பஞ்சு வளையமாக இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.