பாகிஸ்தானின் தொடர் மழைக்கு 24 பேர் பலி! மக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கம்

பாகிஸ்தானின் தொடர் மழைக்கு 24 பேர் பலி! மக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கம்

வியாழக்கிழமை முதல் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே பலத்த மழை பெய்து வந்தது.. கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் “தொடர் மழை காரணமாக பதினான்கு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் இறந்துள்ளதாக உள்ளூர் நிவாரண அதிகாரி தைமூர் அலி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த புயல் மழையால் பல வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 24 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் மீட்புப்படை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். 

pakistan-rain-90

வியாழக்கிழமை முதல் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே பலத்த மழை பெய்து வந்தது.. கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் “தொடர் மழை காரணமாக பதினான்கு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் இறந்துள்ளதாக உள்ளூர் நிவாரண அதிகாரி தைமூர் அலி தெரிவித்துள்ளார்.

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை காரணமாக பல மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் சாலையில் வழுக்கி, பல விபத்துக்கள் ஏற்படுள்ளன. 

paskitan-rain-89

தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு பாகிஸ்தான் நாட்டு மக்களின் அன்றாட வாழ்வை முடக்கியுள்ளன. தொலைத்தொடர்பு துண்டிப்பு மற்றும் மின்சாரத்தடை காரணமாக மக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.