பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பிடமிருந்து பணம் வாங்கும் பா.ஜ. – சர்ச்சையை கிளப்பிய திக்விஜய சிங்…

 

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பிடமிருந்து பணம் வாங்கும் பா.ஜ. – சர்ச்சையை கிளப்பிய திக்விஜய சிங்…

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பிடமிருந்து பா.ஜ. மற்றும் பஜ்ரங் தளம் பணம் வாங்குகின்றன காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

மத்திய பிரதேசத்தில் தீவிரவாத நிதி வழக்கு தொடர்பாக, கடந்த புதன்கிழமையன்று  சாட்னா மாவட்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்களில் குறைந்தபட்சம் 17 பாகிஸ்தான் போன் எண்கள் இருந்தன. அந்த எண்களுக்கு அடிக்கடி வாட்ஸ் கால் மற்றும் வீடியோ செய்திகள் அனுப்பிய தெரியவந்தது. கடைசியாக பாகிஸ்தானின் சுதந்திர தினமான கடந்த மாதம் 14ம் தேதி தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. 

ஐ.எஸ்.ஐ.

கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர்  பல்ராம் சிங், சுனில் சிங் மற்றும் ஷம்பம் திவாரி என்பது தெரியவந்தது. இதில் பல்ராம் சிங் பஜ்ரங் தளத்தின் முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.

திக்விஜய சிங் கடந்த சனிக்கிழமையன்று இது தொடர்பாக பேட்டி ஒன்றில் கூறுகையில், பாகிஸ்தானுக்கான முஸ்லிம் இல்லாதவர்களும் உளவு பார்க்கிறார்கள். ஐ.எஸ்.ஐ. அமைப்பிடமிருந்து பஜ்ரங் தளம் மற்றும் பா.ஜ. பணம் வாங்குகிறது. இதில் கவனம் செலுத்துங்கள். முஸ்லிம்களை காட்டிலும் முஸ்லிம் இல்லாதவர்கள்தான் அதிகளவில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக உளவு பார்க்கின்றனர். நினைவில் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

பா.ஜ.

திக்விஜய சிங்கின் கருத்துக்கு பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுகிறார் என தெரிவித்தது. 

இந்நிலையில் திக்விஜய சிங் தனது டிவிட்டரில், உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பிடமிருந்து பா.ஜ. பணம் பெறுவதாக நான் குற்றம் சாட்டியதாக சில சேனல்களில் செய்தி வெளியாகிறது. இது முற்றிலும் தவறு.

பஜ்ரங் தளம் மற்றும் பா.ஜ.வின் ஐ.டி. பிரிவு அதிகாரிகளை மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர். நான் இந்த குற்றச்சாட்டை தான் கூறினேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த சேனல்கள் ஏன் இந்த கேள்வியை பா.ஜ.விடம் கேட்பதில்லை? என்று பதிவு செய்து இருந்தார்.