பஸ் ஸ்டாப்பில் ஓடிய ஆபாச வீடியோ… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

 

பஸ் ஸ்டாப்பில் ஓடிய ஆபாச வீடியோ… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!

இதை அங்கிருந்த சகபயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில்  பதிவிட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் அமைந்துள்ள ஹோசங்கபாத் சாலையில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு பணம் வசூலிக்கும் இயந்திரத்தின் டிஸ்பிளேவில் ஆபாச வீடியோ ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. இதை கண்ட பயணிகள் முகம் சுழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை அங்கிருந்த சகபயணி ஒருவர் வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில்  பதிவிட்டுள்ளார்.

bus

தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகளில் கல்லூரி மாணவர்கள் பள்ளி குழந்தைகள் என பலர்  பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தில் ஆபாச வீடியோ ஓடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

bus

இதுகுறித்து கூறியுள்ள போபால் மாநகராட்சி மற்றும் போபால் சிட்டி லிங்க் லிமிடெட் இயக்குநர் கேவால் மிஸ்ரா, இந்த வீடியோ அக்டோபர் 28-ம் தேதி  பதிவேற்றப்பட்டுள்ளது. சைபர் செல்லுக்கு புகார் கொடுத்துள்ளோம். இதுகுறித்து  எப்.ஐ.ஆர் பதிவு செய்யவும் கூறியுள்ளேன்  என்று தெரிவித்துள்ளார்.