பஸ் வசதி இல்லாததால் பெண்களை படிக்க அனுப்ப யோசிக்கும் மக்கள்! பஸ் வசதியை அதிகரிக்க கோரிக்கை

 

பஸ் வசதி இல்லாததால் பெண்களை படிக்க அனுப்ப யோசிக்கும் மக்கள்! பஸ் வசதியை அதிகரிக்க கோரிக்கை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ராயப்பன்பட்டி வழியாக பஸ்கள் மிகக் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு சில பஸ்கள் மட்டும் இயக்கப்படுவதால் எப்போதும் பஸ் நிரம்பி வழிகிறது. மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுவிடுகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்துக்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளதாக பொது மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ராயப்பன்பட்டி வழியாக பஸ்கள் மிகக் குறைந்த அளவே இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு சில பஸ்கள் மட்டும் இயக்கப்படுவதால் எப்போதும் பஸ் நிரம்பி வழிகிறது. மாணவர்கள் சைக்கிளில் பள்ளிக்கு சென்றுவிடுகின்றனர். பெண்களை தனியாக சைக்கிளில் அனுப்ப பெற்றோர் யோசிக்கின்றனர். போதுமான பஸ் வசதி இல்லாததால் பெண்கள் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத நிலை உள்ளது.

uthamapalayam

இந்த பகுதியில் ராயப்பன்பட்டியில்தான் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இங்குள்ள பள்ளிகளில்தான் தங்கள் பிள்ளைகளை சேர்க்கின்றனர். போதுமான பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் வீடு திரும்ப மிகவும் கஷ்டப்படுகின்றனர். பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது, கூட்ட நெரிசலில் சிக்கி செல்ல வேண்டியுள்ளது. எனவே, உத்தம பாளையத்திலிருந்து கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி வழியாகவும், கம்பத்திலிருந்து கே.கே.பட்டி வழியாகவும் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.