பவானி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை! ஒரே மாதத்தில் 2வது தடவையாக முழு கொள்ளளவு!

தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையாக இருக்கிறது பவானி சாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப் பெரிய அணையும் இது தான். மொத்தம் 105 அடிகள் கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணை, இந்த மாதத்தில் மட்டுமே இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.  பவானி சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தற்போது அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் பவானி ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டு வருகிறது. 

bhavani sagar dam

கோபிசெட்டிபாளையம், கொடிவேரி, நஞ்சை புளியம்பட்டி, மேவாணி உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் வருவாய் துறை அதிகாரிகள் தண்டோர மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை செய்து வருகின்றனர். மேலும், பவானி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும், ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகளவில் இருப்பதால் பரிசல் போன்றவைகளை இயக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.