பழ வண்டியை தூக்கி வீடிய வாணியம்பாடி ஆணையர் சிசில் தாமஸ் பணியிட மாற்றம்!

 

பழ வண்டியை தூக்கி வீடிய வாணியம்பாடி ஆணையர் சிசில் தாமஸ் பணியிட மாற்றம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் சாலையோர வியாபாரிகள் ஈடுபட்டிருந்தனர்.  

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் சாலையோர வியாபாரிகள் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை எட்டி உதைத்தும் சாலையில் தூக்கி வீசியும் அராஜக செயலில் ஈடுப்பட்டார்.

இதற்கான வீடியோ இணையத்தில் வெளியாகி கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் போல் கொரோனா  வைரஸ் சமூக தொற்றாக பல்வேறு பகுதிகளில் பரவக்கூடிய நிலை வாணியம்பாடி பகுதியிலும் ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்திலே இப்படி செய்ததாகவும் இந்த செயலுக்காக தான் வருந்துவதாகவு  நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் வருத்தம் தெரிவித்தார். மேலும் தன்னால் பாதிக்கப்பட்ட பழக்கடை உரிமையாளர் பூங்கொடிக்கு 2000  ரூபாயும், சித்ராவிற்கு  1500ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி போன்ற பொருட்களை வழங்கியும் வருத்தம் தெரிவித்தார்.

 

 

இந்நிலையில்  வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். வாணியம்பாடி நகராட்சி ஆணையர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சிசில் தாமஸ்க்கு பதில் மேல்விஷாரம் நகராட்சி பொறியாளர் பாபுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.