பழைய வீட்டில் புதையல் கிடைக்கலாம்! வீடே புதையலாக கிடைக்குமா! அமெரிக்காவில் கிடைத்திருக்கிறது!?

 

பழைய வீட்டில் புதையல் கிடைக்கலாம்! வீடே புதையலாக கிடைக்குமா! அமெரிக்காவில் கிடைத்திருக்கிறது!?

பழைய வீட்டில் புதையல் கிடைக்கலாம் ஆனால் அமெரிக்காவில் ஒருவருக்கு வீடே புதையலாக கிடைத்திருக்கிறது.

அரிசோனா: பழைய வீட்டில் புதையல் கிடைக்கலாம் ஆனால் அமெரிக்காவில் ஒருவருக்கு வீடே புதையலாக கிடைத்திருக்கிறது.

அந்த அதிர்ஷ்டக்கார மனிதனின் பெயர் ஜான் சிம்ஸ்.அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் இருக்கும் டஸ்கனைச் சேர்ந்தவர். சிம்ஸ் நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு பழைய வீட்டை 2015 ல் வாங்கினார்.காசை வாங்கிக் கொண்டு சாவியை கொடுத்த நண்பர் தன் வீட்டைப் பற்றி கொஞ்சம் புதிரான செய்தி ஒன்றையும் சொன்னார். அதாவது அந்த வீட்டில் வெளியே தெரியாத இன்னும் கண்டுபிடிக்கபடாத ஒரு விஷயம் இருப்பதாக தெரிந்தது.சிம்ஸ் அந்த வீட்டின் புளூப்பிரிண்டை தேடி பிடித்து ஆராய்ந்தாததில் வீட்டின் பின்பக்கத்தில் வட்டம் ஒன்று வரையப்பட்டு இருப்பதைப் பார்த்தார்.

John Sims

அதை முதலில் பார்த்த போது இந்த வீட்டைப்பற்றி அரிசோனாவே பேசப்போகிறது என்று சிம்ஸ் எதிர் பார்க்கவில்லை. ஆனால்,அதைத் தோண்டிப்பார்க்க தீர்மானித்து செயலில் இறங்கினார். உள்ளே இருப்பது என்ன என்பது தெரியாமலே! விரைவிலேயே மண்ணுக்குள் இறக்கிய மண்வெட்டி ஒரு இரும்புப் பொருள் மீது மோதும் ஒலி கேட்டது. மெல்ல அந்த இரும்புப் பொருளை சுற்றி தோண்டிய போது ஒரு வட்ட வடிவ இரும்பு கதவை கண்டு பிடித்தார்.

John Sims house

சிறிது ஆராய்ச்சிக்கு பிறகு அது என்ன என்று தெரிந்து விட்டது. அது விமானத்தில் இருந்து எதிரி நாடு குண்டு வீசினால் பதுங்கி இருக்க பயன்படும் காப்பறை. அறுபது வருடம் முன்பு கட்டப்பட்டு இருக்க வேண்டும், அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அணுகுண்டு போர் நடக்கும் என்று அமெரிக்கர்கள் பீதியில் வாழ்ந்த காலத்தில் வடமேற்கு பகுதி மாநிலங்களில் இது. போன்ற நிலவரைகள் நூற்றுக்கணக்கில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

John Sims house

சிம்ஸ் நண்பர்களின் உதவியுடன் அந்த வட்ட வடிவ இரும்புக்கதவைத் திறந்தார். அங்கே கீழ்நோக்கி செல்லும் இரும்பு சூழல் படிக்கட்டுகள் இருந்தன, அதன் வழியே இறங்கி உள்ளே போனால் அறைக்கோள வடிவில் அமைக்கபட்டிருந்தது அந்த பாம் ஷெல்ட்டர். நண்பர்களோடு சேர்ந்து அதைச் சுத்தம் செய்த போது அது மிகப்பெரிய அறை என தெரிந்தது. அதுமட்டுமல்ல, போர்காலத்தில் பதுங்கி இருக்கும்போது பருக நீர், உண்ண உணவும் கூட சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. அனால் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் அவற்றை குழிதோண்டி புதைத்துவிட்டார்.

சிம்ஸ் முதல் வேலையாக துருப்பிடித்த அந்த சுழல் படிக்கட்டை புதிதாக மாற்றியமைத்து மின் வசதி செய்தார். அங்கங்கே உதிர்ந்திருந்த கான்கிரீட்டை பூசி சரிசெய்தார். உள்ளே நுழையும் வாசலையும் பதிதாக மாற்றி அமைத்து புதிய கதவு ம் பொருத்தியதும் அந்த பழைய பாம் ஷெல்ட்டர் இப்போது சிம்சின் நவீன வீட்டின் ஒரு பகுதியாகிவிட்டது.