பழைய மொபைல்போன்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட விராட் கோலி ஓவியம்! 

பழைய மொபைல்போன்களை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்ட விராட் கோலி ஓவியம்! 

பழைய மொபைல் போன்கள் மற்றும் போன்களின் பாகங்களை கொண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் உருவப்படத்தை அவரது ரசிகர் ஒருவர் உருவாக்கிய ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

பழைய மொபைல் போன்கள் மற்றும் போன்களின் பாகங்களை கொண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் உருவப்படத்தை அவரது ரசிகர் ஒருவர் உருவாக்கிய ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி கவுகாத்தியில் இன்று இரவு ஏழு மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு கவுகாத்தி நகருக்கு சென்றுள்ளார். அங்கு அவரது தீவிர ரசிகரான ராகுல் என்பவர் உடைந்த மொபைல் போன்களை கொண்டு கோலியின் உருவத்தை உருவாக்கியுள்ளது. வித்தியாசமான ராகுலின் படைப்பை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளது. வித்தியாசமான முறையில் தன் உருவப்படத்தை உருவாக்கிய ராகுலுக்கு, விராட் கோலி தனது ஆட்டோ கிராப்பை பரிசாக வழங்கினார். 

virat

இதுகுறித்து கூறியுள்ள ராகுல், “3  பயனற்ற பழைய மொபைல் போன்களையும், கம்பிகளையும் வைத்து கோலியின் உருவப்படத்தை உருவாக்கியுள்ளேன். இதனை செதுக்க எனக்கு மூன்று நாட்களானது” என்று கூறினார்.