பழைய மற்றும் காலாவதி ஆன உணவு பொருட்களை அழியுங்க…. உணவு பொருட்கள் மற்றும் ஸ்வீட் கடைகளுக்கு அரசு உத்தரவு…

 

பழைய மற்றும் காலாவதி ஆன உணவு பொருட்களை அழியுங்க…. உணவு பொருட்கள் மற்றும் ஸ்வீட் கடைகளுக்கு  அரசு உத்தரவு…

பஞ்சாப்பில் லாக்டவுனால் நீண்டநாட்களாக பயன்படுத்தாததால் பழதான, காலாவதி மற்றும் துர்நாற்றம் வீசும் உணவு பொருட்களை அழியுங்க என உணவு பொருட்கள் விற்பனை செய்யும் மற்றும் ஸ்வீட் கடைகளுக்கு பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாழு முழுவதுமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் இம்மாதம் 17ம் தேதி வரை மொத்தம் 54 நாட்கள் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளது. லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்படும் பிரதமர் மோடி தகவல் தெரிவித்துள்ளது. லாக்டவுனின் முதல் 40 நாட்கள் (மே 3ம் தேதி வரை) அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து மற்ற எந்தவொரு கடைகளும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

கெட்ட உணவு பொருளை கொட்டும் கடைக்காரர்

இதனால் நாடு முழுவதும் (மேற்கு வங்கம் தவிர்த்து) உள்ள பேக்கரி, ஸ்வீட் மற்றும் உணவு பொருட்கள் கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியது. மேலும் அத்தியாவசியமில்லாத பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறந்து கொள்ள அனுமதி அளித்தது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும் கடைகள் திறக்கப்பட்டன.

உணவு பாக்கெட்டுகளில் காலாவதி தேதியை பார்க்கும் அதிகாரிகள்

பஞ்சாப் மாநிலத்திலும் கடைகள் திறக்கப்பட்டன. அதேசமயம் உணவு பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் ஸ்வீட் கடைகள், லாக்டவுனால் நீண்ட நாட்களாக பயன்படுத்ததால் பழதான, காலாவதி மற்றும் துர்நாற்றம் வீசும் உணவு பொருட்களை அழிக்கும்படி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. காலாவதியான உணவு பொருட்கள் பாக்கெட்டுகளை அழிக்கும்படி கடைகளுக்கு அம்மாநில தகவல் மற்றும் பொதுமக்கள் தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. நேற்று மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பஞ்சாப் சுகாதாரத்துறை பல்பீர் சிங்கை சந்தித்து அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்தார்.