பழைய ஏ.டி.எம் கார்டு செல்லாது… பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட எஸ்.பி.ஐ!

பழைய ஏ.டி.எம் கார்டு செல்லாது… பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட எஸ்.பி.ஐ!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ பழைய மேக்னடிக் ஸ்டிப் ஏ.டி.எம் கார்டுகள் ஜனவரி 1 முதல் செல்லாது என்று அறிவித்துள்ளது. 
ஏ.டி.எம் கார்டுகள் மூலம் பணம் எடுப்பது, ஆன்லைன் ஷாப்பிங் செய்வது எளிமையானது. இந்த கார்டுகளின் இயக்கம் அதில் உள்ள மேக்னடிக் ஸ்டிரிப் மூலமாக செயல்பட்டு வந்தது. ஆனால், இந்த ஸ்டிரிப்களை போலியாக உருவாக்கி மோசடியில் ஈடுபடுவது அதிகரித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அம்சங்கள் கடுமையாக்கப்பட்டன.

atm card

புதிதாக ஏ.டி.எம் கார்டுகளில் இ.எம்.வி என்ற சிப் பொருத்தப்பட்டது. இந்த சிப்களை ஹேக் செய்து முறைகேட்டில் ஈடுபடுவது கடினம். தற்போதைக்கு இந்த சிப் முறையே அதிகம் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. எனவே, எல்லா வங்கிகளும் இ.எம்.வி முறைக்கு மாறும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 
வங்கிகளும் மேக்னடிக் ஸ்டிரிப் கார்டுகளை அளிப்பதை நிறுத்தி, இ.எம்.வி-க்கு மாறிவிட்டன. ஆனால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அளிக்காமல், ஏ.டி.எம் கார்டுகளை புதுப்பிக்கும்போது, புதிதாக கேட்பவர்களுக்கு மட்டும் இந்த கார்டுகளை வழங்கி வருகின்றன.

atm card

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய வங்கி நெட்வொர்க் கொண்ட எஸ்.பி.ஐ டிசம்பர் 31 நள்ளிரவுக்குப் பிறகு பழைய ஏ.டி.எம் கார்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட 15 நாட்களுக்குள்ளாக வங்கிக் கிளையை அணுகியோ, ஆன்லைனில் விண்ணப்பம் செய்தோ, புதிய ஏ.டி.எம் கார்டை வாங்கிக்கொள்ளும்படி அந்த வங்கி அறிவித்துள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும் கூறியுள்ளது.