பழுதாகியுள்ள தமிழக அரசு:ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் சரியாகாது! கமல்ஹாசன் கடும் விமர்சனம்!

 

பழுதாகியுள்ள தமிழக அரசு:ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் சரியாகாது! கமல்ஹாசன் கடும் விமர்சனம்!

தமிழக அரசு எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமரிசனம் செய்துள்ளார். 

சென்னை: தமிழக அரசு எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமரிசனம் செய்துள்ளார். 

மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டிருந்தபோது ஜெனரேட்டரும் பழுதானதால் ஐந்து நோயாளிகள் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். 

அதில் அவர் கூறியதாவது, ‘டெல்லியிலிருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதுபட்டுள்ள தமிழக அரசை சரிசெய்ய முடியாது. எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் இன்றைய தமிழக அரசின் நிலையாக உள்ளது’ என்று கூறியுள்ளார். 

அதைத்தொடர்ந்து  தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் கூறிய கமல்ஹாசன், ‘தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை எக்காரணம் கொண்டும் திறக்க கூடாது. மறுவாக்குப்பதிவுக்கான அறிவிப்பு சந்தேகத்தை எழுப்புகிறது’ என்று கூறியுள்ளார்.