பழிவாங்கப்பட்ட தோனி! அதிர்ச்சியில் ரசிகர்கள்…. 

 

பழிவாங்கப்பட்ட தோனி! அதிர்ச்சியில் ரசிகர்கள்…. 

பிசிசிஐ வெளியிட்டுள்ள வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் விடுபட்டுள்ளது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது. 

பிசிசிஐ வெளியிட்டுள்ள வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் விடுபட்டுள்ளது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது. 

‌2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்‌ வரையிலான வீரர்கள் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறா‌தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ‌கடந்த ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு கடந்த 6 மாதங்களாக கிரிக்கெட் களத்தில் தோனியை காணமுடியவில்லை. பல்வேறு ஒருநாள் மற்றும் டிவென்டி-20 தொடர்களில் பங்கேற்ற இந்திய அணியில் தோனியின் பெயர் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இதனால், தோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்ற ஊகங்களும் வெளிவந்தன. ஆனால், பிசிசிஐ-யும், தோனியும் ஓய்வு குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ஓய்வு காலம் நெருங்கிவிட்டதோ என்ற கேள்வியையே எழுப்பியுள்ளது.  

dhoni

தற்போது பிசிசிஐ அறிவித்துள்ள ஒப்பந்த பட்டிய‌லில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் பெறும் ஏ ப்ளஸ் கிரேடில் கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜாஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 5 கோடி ரூபாய் ஊதியம் பெறும் ஏ கிரேடில் அஷ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல் ஆகியோருடன் ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதேபோல் 3 கோடி ரூபாய் ஊதியம் பெறும் பி கிரேடில் ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ்,  விருத்திமான் சாஹா, யுஸ்வேந்திர சாஹல்,  மயங்க் அகர்வால் ஆகியோரது பெயர்களும், ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் ஊதியம் பெறும் சி கிரேடில் ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர்‌, கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சஹார், ஹனும விஹாரி, ஷ்ரதுல் தாக்குர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. 

MSDhoni

தோனி மீது கங்குலிக்கு பழைய கசப்புணர்வு இருந்து கொண்டே இருந்தது. 2017 ஆண்டு ஒரு பேட்டியில் தோனி 20/20 போட்டிக்கு சிறந்த வீரர்தானா? என கங்குலி கேள்வி எழுப்பினர் தோனிக்கு, கங்குலி மீதுமட்டுமல்ல சேவாக், தற்போது பா.ஜ.க. எம்.பி.யாக உள்ள கவுதம் காம்பீர், யுவராஜ் சிங், ஆகியோருடனும் கருத்துவேறுபாடு இருந்தது. இந்நிலையில் தோனி மீது கங்குலிக்கு இருந்த வெறுப்புதான் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் விடுபட்டிருப்பது குறிப்பிடதக்கது.