பழிசுமக்கத் தமிழிசை… பதவிக்கு நிர்மலா சீதாராமனா..? மோடியின் சூழ்ச்சி..!

 

பழிசுமக்கத் தமிழிசை… பதவிக்கு நிர்மலா சீதாராமனா..? மோடியின் சூழ்ச்சி..!

தமிழிசையை போல இந்த மீம்ஸ்களை எதிர்கொண்டு பக்குவமாக நடந்து கொள்ளும் தகுதி கூட இந்த நிர்மலா சீதாரமனுக்கு எல்லை என்பதுதான் இன்னும் கொடுமையான விஷயம்.

ஜனசங், ஆர்.எஸ்.எஸ்… ஆகியவற்றின் மறு வடிவமான பாஜகவை தேசத்தின் மீது பற்றுக் கொண்ட சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்தியாயா ஆகியோர் கட்டமைத்து வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோர் நாட்டுப்பற்றுடன் வளத்தெடுத்தனர். ஓடாய் தேய்ந்து அவர்கள் உருவாக்கிய பாஜகவில் இன்று பதவியை அனுபவிப்பர்களில் ராஜ்நாத் சிங்கை தவிர மற்றவர்களெல்லாம் ஓரம் கட்டுப்பட்டு விட்டனர். அல்லது ஒதுங்கி விட்டனர். அட, எல்.கே. அத்வானியை கழற்றி விட்டவர்களுக்கு மற்றவர்களெல்லாம் எம்மாத்திரம். தமிழிசை

உழைத்து ஓடாய் தேய்ந்தவர்களுக்கெல்லாம் கிடைகாத பதவியை மக்களை சந்திக்காமலேயே பெற்று முக்கியத்துவம் பெற்று வருகிறார்கள் பாஜகவில்…  நிர்மலா சீதாராமன் இரு முறை மக்களை சந்திக்காமலேயே ராஜ்யசபா மூலம் எம்.பியாகி இரு முறையுமே மிக முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு துறை, நிதித்துறையை பெற்று விட்டார். 

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் ஆளும், எதிர்கட்சிக்கு எதிராக இதுவரை எந்த ஒரு போராட்டத்திலும் நிர்மலா சீதாராமன் பங்கேற்றதே இல்லை. இந்திராகாந்திக்கு அடுத்து பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி அமைச்சராக பொறுப்பேற்கும் இரண்டாவது பெண்மணி என்கிற சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் நிர்மலா சீதாராமன் .நிர்மலா

ஆனால் பாஜகவில் ஓடியாடி வருடந்தோறும் உழைத்தும், கட்சிக்காக  மக்களின் எதிர்ப்புகளையும், வசவுகளையும் தாங்கிக் கொண்டு எந்த ஆதாயமும் பெறாதவர்கள் பாஜகவில் அதிகம். அதில் முதலிடம் பாஜக தமிழக தலைவர் தமிழிசைக்கே…  போராட்டம், எதிர்ப்புகள், மீம்ஸ்கள் எதிர்க்கொண்டு என பாவம் ஆண்டுதோறும் தமிழிசை தமிழகம் முழுவதும் புயலாய் சுழன்றடித்து வருகிறார். பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு விளக்கம்  கொடுக்கவே அவரது ஆயுளில் பாதி போயிருக்கும். 

அதுமட்டுமா தேர்தல் களத்தில் எத்தனை தோல்விகள்… 2006 சட்டமன்றத் தேர்தல் இராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி, 2011 சட்டமன்றத் தேர்தல் வேளச்சேரி தொகுதியில் தோல்வி, 2016 தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினார். அதுமட்டுமா? 2009ம் ஆண்டு வடசென்னை மக்களவைத் தொகுதியிலும், 2014ல் தென்சென்னை தொகுதியிலும், 2019ல் தூத்துக்குடி மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை மட்டுமே கண்டுள்ளார் தமிழிசை. இவருக்காவது தேர்தலில் போடியிட பாஜக சீட்டாவது ஒதுக்குகிறது. வானதி

வானதி சீனிவாசனுக்கு அதுவும் கிடையாது. ஒவ்வொரு தேர்தலின் போதும் அவருக்கு சீட் கொடுக்கப்படும் என எதிர்பார்ப்பில் ஏமாற்றமே மிஞ்சும். ஆனாலும் அசராமல் கட்சிப்பதவிகளை ஆற்றி வருகிறார். 
 இவர்களுக்கெல்லாம் கிடைக்காத பதவி உழைக்காமல், மக்களை சந்திக்கமால் ஒயிட்காலர் நிர்மலா சீத்தாராமனுக்கு  கிடைத்திருக்கிறது.

தமிழிசைக்கு எதிராக பொங்கும் போராளீஸ் இப்போது அவர் மீது பரிதாபப்பட்டு வருகிறார்கள். காரணம் நிர்மலா சீதாராமன். ஆம், ‘’பழிசுமக்கத் தமிழிசை. பதவிக்கு நிர்மலா சீதாராமன். இதுதான் பார்ப்பனீய சூழ்ச்சி’’ ஆகையால் தமிழிசையை விட்டுவிட்டு இனி நிர்மலா சீதாராமனை வைத்து மீம்ஸ் போடணும்’ எனக் கிளம்பி இருக்கிறார்கள். 

தமிழிசையை போல இந்த மீம்ஸ்களை எதிர்கொண்டு பக்குவமாக நடந்து கொள்ளும் தகுதி கூட இந்த நிர்மலா சீதாரமனுக்கு எல்லை என்பதுதான்  இன்னும் கொடுமையான விஷயம்.