பழிக்கு பழி என்பதுதான் நட்பா? அமெரிக்காவுக்கு ராகுல் கேள்வி

 

பழிக்கு பழி என்பதுதான் நட்பா? அமெரிக்காவுக்கு ராகுல் கேள்வி

அமெரிக்காவிற்கு ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து மனிதாபிமான அடிப்படையில் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை சில குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 

 

 

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், “இந்தியர்களின் தேவையை தாண்டிதான் உயிர் காக்கும் மருந்துகளை மற்ற நாடுகளுக்கு தரவேண்டும். பழிக்கு பழி என்பது நட்பாக இருக்க முடியாது. இருந்தாலும் இந்தியர்கள் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டும். நட்பு என்பது பதிலடி குறித்தது அல்ல” என பதிவிட்டுள்ளார்.