‘பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது’: வேலூர் தொகுதி தேர்தல் முடிவை விமர்சித்த அதிமுக அமைச்சர்!

 

‘பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது’: வேலூர் தொகுதி தேர்தல் முடிவை  விமர்சித்த அதிமுக அமைச்சர்!

காலம் செல்ல செல்ல திமுக தேய்பிறையாகப் போய்க்கொண்டிருக்கிறது. அதிமுக வளர்பிறையாக இருக்கிறது

‘பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது’: வேலூர் தொகுதி தேர்தல் முடிவை  விமர்சித்த அதிமுக அமைச்சர்!

சென்னை : 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் திமுக தேறாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

வேலூர் மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏ சி சண்முகத்தை திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.இதன் மூலம் மக்களவையில் திமுக எம்.பி.க்களின் பலம் 34 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வேலூர் தொகுதி தேர்தல் முடிவு குறித்து கருத்து  தெரிவித்துள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ‘வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றி மோசமான மோசடியான வெற்றி. பணத்தை மட்டுமே நம்பி வெற்றி பெற்றுள்ளது.  வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற 125 கோடி செலவு செய்தது. இதெல்லாம் ஒரு வெற்றியா? உண்மையில் வேலூரில் வென்றது அதிமுக தான். இந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் திமுக தேறாது என்பதையே காட்டுகிறது’ என்றார்.

stalin

தொடர்ந்து பேசிய அவர், ‘காலம் செல்ல செல்ல திமுக தேய்பிறையாகப் போய்க்கொண்டிருக்கிறது. அதிமுக வளர்பிறையாக இருக்கிறது. வேலூர் தொகுதியைப் பொறுத்தவரையில் பழம் நழுவி பாலில் விழாமல் கீழே விழுந்துவிட்டது. அடுத்தமுறை நிச்சயமாகப் பழம் பாலில் விழும்’ என்றார்.