‘பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு’ : தமிழக கோயிலிலுக்கு கிடைத்த பெருமை!

 

‘பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு’ : தமிழக கோயிலிலுக்கு  கிடைத்த பெருமை!

பழனி முருகன் கோயில்  பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

‘பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு’ : தமிழக கோயிலிலுக்கு  கிடைத்த பெருமை!

திண்டுக்கல்:  பழனி முருகன் கோயில்  பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். ஆண்டிக்கோலத்தில் மலைமீது நிற்கும் மூலவர் சிலை, போகரால் நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

இங்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் உலக அளவில் பிரபலமான ஒன்றாகும். இந்த பஞ்சாமிர்தமானது  வாழைப்பழம், பேரீச்சம் பழம், தேன், ஏலக்காய்,   வெல்லம், நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பஞ்சாமிர்தத்தைச் சாப்பிடுவதன் மூலம் நோய்கள் தீரும் என்பது முருக பக்தர்களின் நம்பிக்கையாகும்.  

palani

இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற இந்தப் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி பழனி பஞ்சாமிர்தத்திற்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதன்முறையாகத் தமிழ்நாட்டுக் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பெருமை பழனி முருகன் கோயிலுக்குக் கிடைத்துள்ளது.

முன்னதாக கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.