பழனிமலை முருகனுக்கு அரோகரா… ஒரு பக்கெட் தண்ணி பத்து ரூபா…

பழனிமலை முருகனுக்கு அரோகரா… ஒரு பக்கெட் தண்ணி பத்து ரூபா…

தமிழகத்து கோடையின் தண்ணீர்ப் பஞ்சம் லார்டு முருகாவின் பக்தர்களையும் விட்டுவைக்கவில்லை. பழனி முருகனைத் தரிசிக்கவரும் பக்தர்கள் ஆற்றில் சிறப்பான ஒரு குளியல் போட்ட காலம் போய் ஒரு வாளித்தண்ணீருக்கு பத்து ரூபாய் கொடுக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

palani murugan

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சண்முகாநதியில் குளித்துவிட்டு, அலகு குத்தி, காவடிகள் எடுத்து மலைக்கோயிலுக்குச் செல்வது வழக்கம். அத்துடன், பழனி பகுதியில் உள்ள கோயில்களில் நடைபெறும்  திருவிழாக்களுக்கு, சண்முகாநதியில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்துச் செல்வது வழக்கம்.

palani murugan temple

இந்நிலையில், தற்போது போதிய மழை இல்லாததாலும் கோடையின் கொடிய வறட்சியாலும்  சண்முகாநதி தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. மேலும், நீர்பிடிப்பு பகுதிகள் முழுவதும் அமலைச் செடிகள் படர்ந்துள்ளன. இவைகள், ஆற்றில் உள்ள குறைந்தபட்ச நீரையும் உறிஞ்சி விடுவதால் தற்போது பழனி வரும் பக்தர்கள் சண்முகாநதியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.

water

இதை பயன்படுத்தி சிலர், நீர்ப்பிடிப்பு பகுதியில் குழிதோண்டி அதில் கிடைக்கும் ஊற்று நீரை எடுத்து ஒரு வாளி 10 ரூபாய்க்கு விற்கின்றனர். கோயில் சார்பில் குளியல் மற்றும் கழிவறை வசதி செய்து தரப்பட்டிருந்தாலும், ஆற்றுநீரில் குளிப்பதையே பக்தர்கள் புனிதமாக கருதுவதால், ஒரு வாளி தண்ணீரை 10 ரூபாய்க்கு வாங்கி நீராடி வருகின்றனர். அடுத்த கோடையில் இந்த பக்கெட் தண்ணீர் பாக்கெட் தண்ணீராக மாறி அதையும் பத்து ரூபாய்க்கு வாங்கும் தலையில் தீர்த்தம் போல் தெளிக்கும் நிலையும் கூட ஏற்படலாம் யார் கண்டது. இருந்தாலும் சொல்லிவைப்போம் பழனி மலை முருகனுக்கு அரோகரா…