பழசானாலும் உன் ஸ்டைலும் ரேட்டும் குறையவே இல்ல

 

பழசானாலும் உன் ஸ்டைலும் ரேட்டும் குறையவே இல்ல

ஒரு ஆப்பிள் போன் வாங்கணும்னா குறைந்தபட்சம் அரை லட்சமாவது கையில இருந்தாதான் கடைக்குள்ளேயே விடுவான். அதுவே ஆப்பிள் மேக்புக் மாதிரி லேப்டாப் எல்லாம் வாங்கணும்னா லட்சம் இருக்கணும். ஆப்பிள்னாலே காஸ்ட்லிதானே.

ஒரு ஆப்பிள் போன் வாங்கணும்னா குறைந்தபட்சம் அரை லட்சமாவது கையில இருந்தாதான் கடைக்குள்ளேயே விடுவான். அதுவே ஆப்பிள் மேக்புக் மாதிரி லேப்டாப் எல்லாம் வாங்கணும்னா லட்சம் இருக்கணும். ஆப்பிள்னாலே காஸ்ட்லிதானே. அப்டியே நூல் பிடிச்சுப் போனாதான் தெரியுது, ஒரு ஆப்பிள் கம்ப்யூட்டரோட விலை 5 கோடியாம். புது லேப்டாப் விலை அதிகமா இருக்குறதுகூட ஆச்சர்யம் இல்ல, ஆனா  இந்த 5 கோடி ரூவா பழைய ஆப்பிள் கம்ப்யூட்டர்  பழசுன்னா பழசு சாதா பழசு இல்ல, 43 வருஷ பழசு. 

apple pc 750

1976ஆம் ஆண்டு முதன்முதலில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட 200 கம்ப்யூட்டர்களில், வெகுசில இன்னமும் தாக்குப்பிடித்துளளன. போன் வாங்கி ஓரிரு மாதங்களுக்குள் ரிப்பேரானதால், கடுப்பான வாடிக்கையாளர் போனை நடு ரோட்டில் தீயிட்டு கொளுத்துவதெல்லாம் சாதாரணமாகிவிட்ட இக்காலத்தில், 43 வருட பழைய கம்ப்யூட்டர் இன்னமும் வேலை செய்கிறது என்பது எவ்வளவு பெரிய சாதனை? அதனால்தான் அதன் விலையும் அதிகரித்துவிட்டது.

ஏலத்திற்கு வர இருக்கும் இந்த கம்யூட்டர் குறைந்தபட்சம் 2 கோடியிலிருந்து அதிகபட்சம் 5 கோடி வரைக்கும் விலை போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி, ஒரு பத்து நிமிஷம் இருங்க, இந்த செய்தியை டைப் பண்ணின இந்த லேப்டாப் அடிக்கடி மக்கர் பண்ணுது, இதோட பில் எங்க இருக்குன்னு தேடி எடுத்துட்டு வந்தர்றேன்.