பழங்குடி இனத்தின் முதல் மருத்துவர், சரண்யா – வாடி ராசாத்தி!

 

பழங்குடி இனத்தின் முதல் மருத்துவர், சரண்யா – வாடி ராசாத்தி!

அருகில் இருக்கும் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சியைப் பெற்ற சரண்யாவுக்கு, முதற்கட்ட கலந்தாய்வின்போதே பாலக்காடு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாமல் மருத்துவ மேற்படிப்பும் படித்து தனது மலைகிராமத்துக்கே திரும்பவந்து சேவை செய்யவேண்டும் என்பது சரண்யாவின் விருப்பமாம்.

கேரளா, இடுக்கி மாவட்டத்தின் கட்டபணா என்ற மலைவாழ் குக்கிராமத்தின் மோகனன் மினிமோள் தம்பதியரின் ஒரே மகள் சரண்யா வரலாறு படைக்கிறார். இடுக்கி மாவட்டத்தின் மலைவாழ் பழங்குடியினரின் முதல் மருத்துவராக சரண்யா வரவிருக்கிறார். நீட் தேர்வில் பழங்குடியினருக்கான தகுதிப்பட்டியலில் 23ஆவது இடம்பிடித்த சரண்யாவுக்கு, பாலக்காடு மெடிக்கல் கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஸ்வராஜ் சீயோன் பப்ளிக் பள்ளியில் 12ஆவது முடித்த சரண்யா, 90% மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

Kattappana tribal village

அருகில் இருக்கும் நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சியைப் பெற்ற சரண்யாவுக்கு, முதற்கட்ட கலந்தாய்வின்போதே பாலக்காடு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாமல் மருத்துவ மேற்படிப்பும் படித்து தனது மலைகிராமத்துக்கே திரும்பவந்து சேவை செய்யவேண்டும் என்பது சரண்யாவின் விருப்பமாம். மகராசியா வா ராசாத்தி!